May 13, 2021

திருவண்ணாமலையில், பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடையை மீறி, கிரிவலம் சென்றனர்…

1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடியது இங்கு மலையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள் வருடம்தோறும் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக சிறப்பு இதை காண லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள்.

சித்ரா பெளர்ணமி இத்தலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். மற்றும் சிவராத்திரியன்று அடிமுடி காணா அண்ணாமலை என வைபவம் இங்கு நடக்கும் பார்வதிதேவிக்கு இடப்பாகம் கொடுத்த இடம் திருவண்ணாமலை ஆகும், தீபத்தன்று ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்த நிகழ்வு வருடத்தில் தீபத்தன்று மட்டும் தான் நடைபெறும் 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மாதந்தோறும் கிரிவலத்தில் தடைவிதித்து செயல்முறையில் இருந்து வந்தது இந்த மாசி மாத பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்ல தடை என அறிவிக்கப்பட்டிருந்தது இருந்தாலும் பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் வந்தனர்.

பக்தர் ஒருவரிடம் கேட்டபோது 11 மாதமாக கிரிவலம் வராதது எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கிறது. இன்று பக்தர்களே புறப்பட்டு கிரிவலம் சென்று கொண்டிருக்கின்றனர். எனக்கு கிரிவலம் வருவது மிக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றார். என்ன தான் அரசு தடை விதித்தாலும் ஆன்மீக பக்தர்களை தடுக்க முடியாது என்பது இதுவே சாட்சி ஆகும் என்று பக்தர் கூறினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *