May 13, 2021

பழவேற்காட்டில், உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மகளிர் தின பேரணி நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை சமூக சேவை சங்கம், சென்னை திருவள்ளூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில், “பெண்ணே சவால்களை எதிர்கொள்வோம்” என்ற தலைப்பில் மகளிர் தின பேரணியும் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவை சங்கம் இயக்குனர் முனைவர் பேட்டரிக்கு ஜோசப் தலைமையில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஸ்டான்லி செபாஸ்டின் முன்னிலையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பழவேற்காடு மேம்பாலத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சமூக சேவை சங்க வளாகம் வரை ஊர்வலமாக பெண்களைப் போற்றும் வாசகங்களை ஏந்தி வந்தடைந்தனர்.

பின்னர் நடைபெற்ற மகளிர் தின விழா கூட்டத்தில் பொன்னேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்ணியம் குறித்த சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது, ” பெண்கள் தங்கள் உரிமை சார்ந்து பேசும் போதும், செயலில் ஈடுபடும் போதும், எது தடையாக இருக்கிறதோ அதுவே பெண்களுக்கான சவால்” எனவும், “அனைத்து இடங்களிலும் பெண்களை தாயாக தெய்வமாக முன்னிலைப்படுத்தி நமது கொடுக்கின்ற மரியாதையை ஏற்று நாம் ஒழுக்கத்தோடு அதனை காப்பாற்ற வேண்டியது நமது கடமை” கூறினார். பின்னர் சாதித்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. பெண்களின் உரிமையை போற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழவேற்காட்டு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், காளிதாஸ் இந்தியா மேலாளர் ஜான் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *