July 31, 2021

பொன்னேரியில், டி.எஸ்.பி தலைமையில், துணை ராணுவ படையினர் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில், டி.எஸ்.பி கல்பனாதத் தலைமையில் பொது மக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையில், துணை ராணுவ படையினர் காவல்துறையினருடன் இணைந்து முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதில், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், துணை ராணுவப் படை வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி மிடுக்குடன் நடந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, இதே போன்று மீஞ்சூர் சோழவரம் ஆகிய பகுதிகளிலும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர். அதில் துணை ராணுவப்படை கமாண்டோ பாரத் பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சோழவரம் காவல் ஆய்வாளர் நாகலிங்கம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – சுந்தர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *