August 1, 2021

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னங்காரணி கிராமத்தில், கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், எல்லாபுரம் ஒன்றியம், சென்னங்காரணி கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, பிப்ரவரி 24-ம் தேதி 16 அணிகள் கலந்து கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் பி.ரவிச்சந்திரன், ஆகியோரது ஒப்புதலுடன் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஊத்துக்கோட்டை அணிக்கு ரூ13,073-ம், இரண்டாவது பரிசு பெற்ற தாராட்சி அணிக்கு ரூ8,073-ம், மூன்றாம் பரிசு பெற்ற ஆரணி அணிக்கு, ரூ5,073-ம் பரிசுத்தொகையை திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சென்னங்காரணி எம்.ரகுபதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், எஸ்.ஜெகதீஷ், ஆர்.சசிக்கண்ணன், ஜி.காமேஷ், வி.பிரசாந்த், ஜி.ஜெயக்குமார், சென்னங்காரணி தகவல் தொழில் நுட்ப அணி ஜி.அருண்குமார்,எஸ்.தியாகு, சிதம்பரம், பி.முருகன் ஆகியோர் கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *