July 31, 2021

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூபாய் 5,57,250 பறிமுதல்…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 5,57,250 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் 24மணி நேரம் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் ஜி.பாலகுரு உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரி தனி வட்டாட்சியர் தாமோதரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வ.ரவி, போலீஸார் சி.அதிசயராஜ், க.செல்வராஜ், சசிகலா உள்ளிட்டோர் எளாவூர் ஏழுகிணறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்தில், வந்த பெட்டோல் பங்க் ஊழியர் கே.மகேஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூபாய் 5லட்சத்து 57ஆயிரத்து 250 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வட்டாட்சியர்கள் ஏ.என்.குமார், ந.மகேஷ் இது குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5,77,250ஐ அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed