July 31, 2021

கும்மிடிப்பூண்டி அருகே, எளாவூர் சோதனை சாவடியில், கணக்கில் வராத 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 1லட்சத்து 40ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தனி வட்டாட்சியர் தாமோதரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த காரை அதிகாரிகள் சோதனை இட்டனர். இந்த சோதனையில் காரில் 2000ரூபாய்,500ரூபாய்,200ரூபாய் கட்டுகள் அடங்கிய 1லட்சத்து 40ஆயிரம் ரூபாய் இருந்து. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை கொண்டு வந்த ஆந்திர மாநிலம் காளளஸ்தியை சேர்ந்த எம்.டி.ரப்பி என்கிற நபரை அதிகாரிகள் விசாரித்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு உத்தரவின் பேரில் வட்டாட்சியர்கள் குமார், மகேஷ் முன்னிலையில் மேற்கண்ட 1லட்சத்து 40ஆயிரம் ரூபாய் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி அருகே ஐயர் கண்டிகை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் கும்மிடிப்பூண்டியில் அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள கிடங்கிற்கு சுரேஷ் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூபாய் 63,560/- பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed