July 31, 2021

தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியினை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்
டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்
வெகுதூரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டியும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் இருந்து விலக்க கோரியும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டியும் மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஆர்.காத்தவராயன் கூறும்போது, கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் வெகு தொலைவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனால் போதிய வாகன வசதி இன்றியும், பல சிரமத்திற்கு ஆளாகி அடிப்படை வசதிகளின்றியும், தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
தற்போது நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை வெகுதூரத்தில் தேர்தல் பணிக்கு அமர்த்தாமல், 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அருகில் இருக்கக்கூடிய சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்கு அமர்த்தவும், அவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியும், 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்வதாக கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *