July 31, 2021

எண்ணூரில், “விஜய கீதம் அறக்கட்டளை” துவக்க விழா, பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது…

1 min read

சென்னை, எண்ணூர் அடுத்த, அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் கீதா, இவருடைய தந்தை விஜயன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் பலவிதமான சமூக பிரச்சினைகளை எதிர்நோக்கிய விஜயன் குடும்பத்தார். உயிரிழந்த அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய பெண்களுக்கு உதவ முடிவு செய்தனர்.

அதற்காக, பொறியாளர் கீதா ஒரு தொண்டு நிறுவனத்தை துவக்கி அதன் மூலம் ஏழை எளிய பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் விதமாக முதல் கட்டமாக, எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, பெண்களுக்கு துணியில் எம்பிராய்டிங் செய்யும் கைத்தொழிலை பயிற்சியை துவக்கியுள்ளார். இப்பயிற்சியை
டி. ஜே.எஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கபிலன் துவக்கி வைத்தார். முனைவர் பொன்.கோ. சந்திரபோஸ், திரைப்படத் தயாரிப்பாளர் பொன்.கோ. விஜயன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழரசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தம்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், அன்னை சிவகாமி நகர் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிமாறன், பொருளாளர் மழவேந்தி, மற்றும் நிர்வாகிகள் சந்திரன், ஆறுமுகம், சுகுமாரன், ராபர்ட், லெனின், விஜயபாரதி, செழியன், சதீஷ்குமார், கௌதமன், இளங்கோவன், பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் அனைவரும் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ள பொறியாளர் கீதா, தன்னலம் பார்க்காமல், தினமும் ஒரு மணி நேரம் என்ற விதத்தில் 20 நாட்கள் பெறவேண்டிய இப்பயிற்சியை, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தனது முழு வேலையையும் ஒதுக்கி வைத்து, இப்பயிற்சியை நடத்த துவங்கியுள்ளார். இப்பயிற்சியை பெற ஒரு நபருக்கு 7,000 கட்டணமாகும் அதை பெறாமலும், மேலும் அவர்களுக்கு மத்திய உணவு அளித்தும் பயிற்சி அளிக்கும் கீதா அவர்களை பாராட்டி பேசினர். பின்னர் உரையாற்றிய கீதா, “இப் பகுதியிலுள்ள ஏழை, எளிய, ஆதரவற்ற பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் கட்டமாக இப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் தொழில் பயிற்சி அளிக்கவும் ,மற்ற ஊர்களில் உள்ள பெண்களுக்கும் இப் பயிற்சி அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.” என கூறினார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed