August 1, 2021

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர், கூட்டணி கட்சியினரோடு கலந்துரையாடல்…

1 min read

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் அறிவிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டியில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி அவர்களோடு கலந்துரையாடினார்.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வந்த திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை மாநில நிர்வாகி பி.துளசி நாராயணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆறுமுகம், சூர்யபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்று சால்வை அணிவித்து வரவேற்றனர். வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர்களுடன் பேசுகையில், தொகுதியை வெற்றி தொகுதியாக மாற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவினரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது போது, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகவே நினைத்து உழைப்போம் என்றனர்.

தொடர்ந்து புதுகும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத் தலைமையில் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன், மாவட்ட பொது செயலாளர், காங்கிரஸ் நிர்வாகிகள் ராமலிங்கம், சிவாரெட்டி, குணசேகரன்,செல்வம், ஜோதி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரேம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.

அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்த வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் காங்கிரஸ் கட்சியினரோடு பேசும் போது, இந்த தேர்தல் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி நடக்கும் தேர்தல் அல்ல, தமிழ் நாட்டு மக்களை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து காப்பாற்ற நடக்கும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய பாடுபடவேண்டும் என்றார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மணிபாலன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், பாஸ்கரன், அறிவழகன், ரமேஷ், கருணாகரன், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி தலைவர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *