May 14, 2021

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் பல பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை…

1 min read

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தேர்வழி, எளாவூர், ஆரம்பாக்கம், கண்ணம்பாக்கம், பல்லவாடா, பாதிரிவேடு, மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகி திருமலை,94 மாவட்ட பிரதிநிதி கே.வி.ஆனந்தகுமார், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,
பெருவாயல் ஷ்யாம், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் அவர்கள் முன்னிலையில் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசினார்,

அவ்வாறே கும்மிடிப்பூண்டி பஜாரில் திமுக நிர்வாகிகள் அறிவழகன், கருணாகரன், தமிழ்சாதிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் பேசும் போது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திமுக அதிக வாக்குகள் பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மசூதியில் சென்று அங்கிருந்த குருமார்களிடம் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆசி பெற்றார்.

பின்னர் தேர்வழி சந்திப்பில் தேர்வழி , வழுதலம்பேடு, ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட 8 ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட திமுக வேட்பாளர் கோவிந்தராஜிடம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஹரிதாஸ், ஒன்றிய கவுன்சிலர் கெளரி ஹரிதாஸ் ஆகியோர் தேர்தல் நிதியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினர். மேலும் நிகழ்வில் திமுக மூத்த நிர்வாகி கவிஞர் ஆழியாதனிடம் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆசி பெற்றார். நிகழ்வில் ஒன்றிய நிர்வாகி பாஸ்கரன், ரமேஷ், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி தலைவர் பிரபு, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல ஆரம்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மணிபாலன் தலைமையில் மாவட்ட நிர்வாகி மணி, தோக்கம்மூர் திமுக நிர்வாகி விஜயகுமார், மனோகரன், உள்ளிட்டோர் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை வரவேற்ற நிலையில் ஆரம்பாக்கத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து மாநெல்லூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஊராட்சி தலைவர் லாரன்ஸ், ஒன்றிய நிர்வாகி ஏசுரத்தினம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையிலும், மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட நிர்வாகி மோகன்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், தேர்வழி சந்திப்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தான் வெற்றி பெற்றால் கும்மிடிப்பூண்டியில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, மகளிர் குழுக்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி அளித்து அவர்களுக்கு சிறு தொழில் துவங்க கடனுதவி வழங்கி அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வழி செய்யப்படும் என்றார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *