July 31, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல், தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றால், தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றிய உள்ள மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்தினமும் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,58 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். அதன்படி தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 8, லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் தினமும் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா தோற்றால் இறப்பவர்களுடைய எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணை தொடும் நிலையும் உருவாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,500 யை கடந்து உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் சில தினங்களாக, தினமும் கொரோனா உறுதி செய்யப்படுவார்களுடைய எண்ணிக்கை 250 யை கடந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டிலும், கோவை, திருவள்ளூரிலும் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
மேலும் பல மாவட்டங்களில் பரவலாக பாதிப்புகள் படிப்படியாக உயரும் நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தான், தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் முன்னெச்சரிக்கையாக மக்களுடைய கூட்டத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களை காணவும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவும் ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கூடுகின்றனர். இந்நிலையில் தான் கொரோனா தொற்றின் இரண்டாவது சுற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக கவசங்களையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிக,மிக அவசியம்

மேலும், கட்சித் தலைவர்கள் பொது மக்களை ஒரு இடத்தில் கூட்டம் கூட வைக்கும் போது அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில், சமூக இடைவெளியையும், முகக் கவசங்கள் போன்றவைகளை வழங்குவதுடன், வயதானவர்களை கூட்டத்திற்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் போகும் சூழ்நிலையில் பாதிக்கப்படுபவர்கள் மக்கள் தான் என்பதை உணர வேண்டும்.

மேலும், இந்த சூழ்நிலை நிலவுவதால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு தமிழகத்தில் தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து, இந்த கொரோனாவை காரணம் காட்டி, ஆர் கே நகர் இடைத்தேர்தலை போல, இந்த தேர்தலையும் கூட தள்ளி வைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை, தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகள் உணர்ந்து… அதற்கேற்றார் போல் தங்களையும், மக்களையும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

G. பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed