May 13, 2021

திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்…

1 min read

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மூன்றாவது முறையாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவை அண்ணா சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் அவர்களிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு உள்ள ராஜகோபுரம் முன்பு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அண்ணாமலையார் கோவில் முன்புறம் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *