May 14, 2021

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுத் தாக்கல் செய்து, பிரச்சாரத்தை துவக்கினார்…

1 min read

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக சட்டமன்ற வேட்பாளராக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை எடப்பாடி பழனிச்சாமி இன்று தாக்கல் செய்தார்.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் அதிகமான கடன் சுமை இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கடன் சுமையில் தான் உள்ளது என குறிப்பிட்ட முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களை செய்வதில் தமிழக அரசு முதன்மை வகிப்பதாக தெரிவித்தார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *