July 31, 2021

செங்குன்றம் பகுதி மாணவி, தடகள போட்டியில், பஞ்சாபில் பதக்கம் வென்றதால், பொதுமக்கள் பாராட்டு…

1 min read

செங்குன்றம், காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி நாகலிங்கம் என்பவர். அவர் சுதந்திரப் போராட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய, இந்திய தேசிய படையில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார்.

அவருடைய பேத்தியும், செங்குன்றம் திராவிட முன்னேற்ற கழக பொருளாளர் சந்திரசேகர் அவர்களின் மகளுமான கனிமொழி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24 வது தேசிய அளவிலான பெடரேசன் கோப்பைக்கான தடகள (தடை ஓட்டத்தில்) போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், 13.63 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

செங்குன்றம் பகுதிக்கு பெருமை சேர்த்த மாணவி கனிமொழியை செங்குன்றம் பகுதி மக்கள் பெருமையுடன் பாராட்டி உலக அளவில் சாதனைப் படைக்க வாழ்த்தி மகிழ்ந்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *