May 14, 2021

“தமிழகத்தின் முதல்வனே” திமுக பிரச்சார ஒலிநாடா கொளத்தூரில் வெளியிடப்பட்டது…

1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏற்கனவே ஒலிநாடாக்கள் மற்றும் குறும் படங்கள் உட்பட பல விதங்களில் பிரச்சார விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக கட்சியின் பிரச்சாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, “தமிழகத்தின் முதல்வனே” என்ற பிரச்சார ஒலிநாடா கொளத்தூரில் நேற்று வெளியிடப்பட்டது.

சி.ஜே. சுந்தரம் அவர்கள் தயாரித்த ஒலிநாடாவை, வேதமூர்த்தி அவர்கள் வெளியிட்டார். அதை சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும், 65வது வார்டு மாமன்ற உறுப்பினருமான, தேவஜவகர் பெற்றுக் கொண்டார். அப்போது 65வது வட்ட கழக செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், பகுதி பொருளாளர் நாகராஜ், வட்ட பொருளாளர் போத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ஜோதி
நிழல். இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *