May 13, 2021

பொன்னேரி அகத்தீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் 1000-ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
முற்காலத்தில் பொன்னேரி பகுதியில் ஏர் கொண்டு உழுது விவசாயம் செய்ததன் காரணமாக, பொன் ஏர் என அழைக்கப்பட்ட நகரம் கால மாற்றத்தில், பொன்னேரி என தற்பொழுது அழைக்கப்படுகிறது.

இதற்கு சான்றாக, அகத்தீஸ்வரர் சனனதி அமைந்துள்ள கருவரை பின்புற பகுதியில் ஏர் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி தற்பொழுது கும்பமுனிமங்கலம் என அழைக்கப்படுகிறது.
ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக கருங்கல் தூணில் அகத்திய மாமுனிவர் கும்பத்தில் தோன்றியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி கும்பமுனிமங்கலம் என அழைக்கப்படுகிறது. கோயில் முன்பு ஆனந்தபுஷ்கரனி திருக்குளம், இதுவரை வற்றாத குளமாக விளங்கி வருகிறது.
அகத்தீஸ்வரப் சன்னதிக்கு எதிரில் (சரக்கொன்றை மரம் கொன்றை சூடிய பெருமான் என்பதற்காக) மரம் அமைந்துள்ளது.
மிகப்பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பிரம்மோற்ச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ விழாவை யொட்டி முன்னதாக கிராம காவல் தேவதையான எட்டியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் விநாயகர் வீதியுலா நடைபெற்றது.
இதையடுத்து, கொடியேற்றத்துட்டன் பிரம்மோற்ச விழா தொடங்கியது. கொடியேற்ற விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு அன்னவாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாள், தேர் திருவிழாவும், 10-ம் நாள் தெப்போற்சவமும், 11-ம் நாள் புஷ்ப பல்லக்கும், 13-ம் நாள் விடையாற்றியுடன் நிறைவடைகிறது. பிரம்மோற்ச விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொன்னேரி நகர, கும்பமுனிமங்கலம் பகுதி மக்கள் செய்துள்ள்ளனர்.

நிழல் இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *