August 1, 2021

கும்மிடிப்பூண்டியில், விவசாய பகுதிகளில் குளிரூட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு திறக்கப்படும்; திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி…

1 min read

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 12ஊராட்சிகளை சேர்ந்த 30பகுதிகளில் வாக்கு சேகரித்த போது, அனைத்து ஊராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு தலைமையில் புதுவாயல், பெருவாயல், மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், கெட்ணமல்லி, தண்டலச்சேரி, கீழ்முதலம்பேடு, பன்பாக்கம், குருவாட்டுச்சேரி, புதுகும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம், சிறுபுழல்பேட்டை, எஸ்.ஆர்.கண்டிகை, பெத்திக்குப்பம், ஆகிய 14ஊராட்சிகளை சேர்ந்த 30கிராமங்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 2 வார்டுகளில் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஷ்வரி, திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகி துளசிநாராயணன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அருள், காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோபி நயினார், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், மதிமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார்,முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சிக்கந்தர் பாஷா, காஜா மொய்தீன் முன்னிலையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது திறந்த வேனில் சென்றபடியும், வீடு வீடாக சென்றபடியும் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்,

நெசவாளர்கள் அதிகம் உள்ள கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் சேவை, விவசாய பகுதிகளில் தானியங்களை சேமிக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு, கும்மிடிப்பூண்டியில் கூட்டு குடிநீர் திட்டம், பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கும் வகையில் சுயதொழில் பயிற்சி, பின்தங்கிய மாணவர்கள் வசிக்கும் மாணவர்களுக்கு கலைஞர் இலவச டியூஷன் சென்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த பிரச்சார கூட்டங்களில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜெயச்சந்திரன், கௌரி ஹரிதாஸ், ஜெயந்தி கெஜா, மெய்யழகன், கோபால்ரெட்டி கண்டிகை பிரபாகர், காங்கிரஸ் சிவா ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *