May 13, 2021

மீஞ்சூர் அருகே,1 கோடி மதிப்பிலான, 11 வகையான குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்…

1 min read

சென்னையில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல் துறை ஆணையரின் உத்தரவின்பேரில், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனைச்சாவடியில் மாதவரம் துணை ஆணையர் கிருஷணராஜ் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது லாரி ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து, அந்த வாகனத்தின் ஓட்டுநர் கும்மிடிபூண்டி பெருமாள் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் கஜேந்திரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கஜா என்பவரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கிராமத்தில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிலிருந்து லாரியில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து, இங்கு இறக்கி பின்னர் விற்பனைக்கு எடுத்து செய்யப்படுவதாக தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை காவல் துறையினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளையும் 4 டாட்டா ஏசி வாகனங்களையும் சோதனை செய்த போது, அதில் சுமார் 1 கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காவலாளிகள் மற்றும் ராஜ் என்பவரையும் கைது செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்த 2 லாரியையும் 4 டாட்டா ஏசி வாகனங்கள் 7.6 டன் எடையுள்ள 11 வகை ஹான்ஸ் பான்பராக் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து இதற்கு காரணமான கஜா(33), கஜேந்திரன்(39), ராஜி (37) ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *