May 12, 2021

செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி வீதி வீதியாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பு…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தண்டராம்பட்டு மத்திய ஒன்றியம் கீழ் வணக்கம்பாடி, நெடுங்காவடி, கொழுந்தம்பட்டு, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது கிராமங்கள் தோறும் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, வாக்காளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் மு.பெ.கிரி 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், எந்த பயனும் இல்லை முதியோர் உதவித்தொகை திமுக ஆட்சிக்காலத்தில் தடையின்றி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர்.

மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக ஆக்கப்படும் எனவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் மீண்டும் தொடர்ந்து தடையின்றி வழங்கபடும் என உறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் பொழுது தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் எல்ஐசி வேலு, வர்த்தகர் அணி ஜோதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *