May 14, 2021

கும்மிடிப்பூண்டியில், சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கபடும், திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி…

1 min read

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு தலைமையில் பெரிய ஓபுளாபுரம், நரசிங்கபுரம், மெதிப்பாளைம், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், மேலக்கழனி, மங்காவரம், நத்தம், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு ஆகிய 12ஊராட்சிகளை சேர்ந்த 30கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்திற்கு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஷ்வரி, பொதுகுழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகி துளசிநாராயணன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அருள், காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் சம்பத், சிவாரெட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோபி நயினார், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், நேசகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் ராஜா, ஏகாம்பரம், லோகேஷ், நரேந்திரன், அவை தலைவர் வேதாச்சலம், அறிவழகன் ஏற்பாட்டில் திமுக வேட்பாளர் சுமார் 4மணி நேரம் அப்பகுதியில் திறந்த வேனில் சென்றபடியும், வீடு வீடாக சென்றபடியும், 100நாள் பணியாளர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.

மெதிப்பாளையம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட திமுக பிரதிநிதியுமான ராமஜெயம் தலைமையில் மெதிப்பாளையம் ஊராட்சியில் பிரச்சாரம் நடைபெற்றது.
எளாவூரில் திமுக பிரமுகர் தியாகராஜன் ஏற்பாட்டிலும், சுண்ணாம்புகுளத்தில் முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பரிமளம், திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பல்லவன் ஏற்பாட்டிலும், ஓபசமுத்திரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான எஸ்.காளத்தி ஏற்பாட்டிலும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் வீதி வீதீயாக திமுகவினர் உற்சாக வரவேற்புடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நிகழ்வில், திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் அனைத்து கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு மல்லிகை, ரோஜா பயிரிடுவதால் கும்மிடிப்பூண்டியில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும், நெசவாளர்கள் அதிகம் உள்ள கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் சேவை, விவசாய பகுதிகளில் தானியங்களை சேமிக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு, கும்மிடிப்பூண்டியில் கூட்டு குடிநீர் திட்டம், பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கும் வகையில் சுயதொழில் பயிற்சியும்,

பின்தங்கிய மாணவர்கள் வசிக்கும் மாணவர்களுக்கு கலைஞர் இலவச டியூஷன் சென்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சார கூட்டங்களில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் , ஜெயச்சந்திரன், கௌரி ஹரிதாஸ், மெய்யழகன், காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *