July 31, 2021

பொன்னேரியில், வாக்கு சேகரிக்க வரும் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகருக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்க பேரூர் திமுக கூட்டத்தில் முடிவு…

1 min read

வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதி முழுவதும் உள்ள மீஞ்சூர் மற்றும் சோழவரம் அடங்கிய மூன்று ஒன்றியங்களிலும், பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய பேரூராட்சிகளிலும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அவருக்கு, ஆதரவாக திமுக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், பொன்னேரி நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோளுர் கதிரவன், டாக்டர் பரிமளம் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் வேட்பாளர் துரை சந்திரசேகரனுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் உள்ள நிர்வாகிகளுடைய ஆலோசனை கூட்டம் பொன்னேரி பேரூர் நகர செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலும், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலையிலும், நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், பொன்னேரி பேரூராட்சியில் வாக்கு சேகரிக்க வருகைதரவுள்ள, திமுக கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகருக்கு மேளதாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
அதேபோல், தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 6-ஆம் தேதி, 18 வார்டுகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளும், பாக முகவர்களும் வாக்குச்சாவடிக்கு வரக்கூடிய வாக்காளர்களுக்கு உதவியாகவும், வாக்கு சேகரிப்பதில் முழு ஈடுபாடுடனும் செயல்பட வேண்டும் என, பொன்னேரி பேரூர் நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் அனைவரையும் கேட்டுக் கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நகர நிர்வாகிகள் வாசு, ராமலிங்கம், நல்லசிவம், மார்ட்டின் ஆகியோர் உட்பட, பொன்னேரி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 18-வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed