August 1, 2021

கும்மிடிப்பூண்டி அருகே, தனியார் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில், திடீர் தீ விபத்து…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சி எம்.என் கண்டிகை பகுதியில் “ஏ ஆர் எஸ் ஸ்க்ரப் டிரேடர்ஸ்” எனும் தனியார் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் வங்கியில் இருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்தாத காரணத்தால், சீல் வைத்து மூடப்பட்ட நிலையில், இந்த கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த தீ கொலுந்து விட்டு எரிய ஆரம்பித்த நிலையில், அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும் தேர்வாய் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்களும் மின் இணைப்புகளை துண்டித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.

தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கிடங்கை சுற்றிலும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை புகை மண்டலமாகக் காட்சி அளித்ததுடன் வெடித்து சிதறும் தீப்பொறிகளால் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் தீயிக்கு இறையாகலாமென கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *