May 12, 2021

கும்மிடிப்பூண்டி தொகுதியில், வாரம் ஒரு முறை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும், திமுக வேட்பாளர் டிஜே கோவிந்தராசன் உறுதி…

1 min read

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு இடத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நடத்தப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி அளித்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பூவலம்பேடு, பெரியபுலியூர், சிறுவாடா, குருவராஜகண்டிகை, பாலவாக்கம், காரணி, மங்ளம், புதுப்பேட்டை, நெல்வாய், எருக்குவாய், முக்கரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 25கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து பிரச்சாரம் செய்தார்.

நிகழ்விற்கு, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் பாஸ்கரன், திருமலை, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதாமுத்துசாமி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஜி.மனோகரன், து.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் துளசி நாராயணன், ராஜேந்திரன், ரவிக்குமார் காங்கிரஸ் வட்டார தலைவர் பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நேசகுமார் , வழக்கறிஞர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து பூவலம்பேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலபதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவி புனிதவள்ளி, திமுக நிர்வாகி ஜோதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பாசம் அன்பு ஏற்பாட்டிலும், சிறுவாடா, பெரியபுலியூரில் மாவட்ட கலை இலக்கிய நிர்வாகி புருஷோத்தமன் ஏற்பாட்டில் திமுக, கூட்டணி கட்சியினர் ஏற்பாட்டில் வீதி வீதியாக சென்று மக்கள் வரவேற்பை ஏற்று திமுக வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து குருவராஜகண்டிகை ஊராட்சியில் திமுக இளைஞரணி நிர்வாகி ராஜேஷ், யுகேந்தர், ஊராட்சி தலைவர் ரவி, திமுக வழக்கறிஞர் சுரேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில், பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த நிலையில், வீதி வீதியாக நடந்து சென்று திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து எருக்குவாயில் மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் ஸ்ரீதர் ஏற்பாட்டிலும், பாலவாக்கம், எருக்குவாய், மங்களம், காரணி, புதுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரங்களின் போது பேசிய திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கூறுகையில், தொகுதி மக்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு நாள் ஒரு பொதுவான பகுதியில் மக்கள் குறை தீர் கூட்டம் நடத்தப்பட்டு தொகுதி பிரச்சனை அடிக்கடி தீர்கப்படும் என்றும்,

வனத்துறையின் ஒப்புதல் பெற்று சிறுவாடா முதல் கண்ணன்கோட்டை கூட்டுச்சாலை வரை மோசமான சாலை புதுப்பிக்கப்பட்டு புதிய சாலை போடப்படும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3மாதத்திற்கு ஒரு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்,

எருக்குவாய், மங்களம், காரணி, புதுப்பாளையம் பகுதி மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மங்களம், புதுப்பாளையம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே த ரை பாலத்திற்கு பதில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, சிவா, ஜெயசந்திரன், திமுக நிர்வாகி தேர்வாய் சிவ.இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *