May 13, 2021

செங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், 10.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய ஆடியோவை மக்களுக்கு போட்டுக்காட்டி வாக்கு சேகரித்தார்.

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனி சட்டமன்ற திமுக வேட்பாளர் மு.பெ.கிரி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சொர்பநன்தல், கரியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், சொர்பநன்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் கிரிக்கு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய திமுக வேட்பாளர் கிரி, அமைச்சர் ஆர் பி உதயகுமார் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது மீண்டும் தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு எடுத்து பின்னரே இட ஒதுக்கீடு செய்யப்படும் என,

சத்தியம் செய்து வாக்கு சேகரித்த செய்தி தொலைக்காட்சியில் வெளியான ஆடியோவை பிரச்சார வண்டியில் மக்களுக்கு போட்டுக்காட்டி தமிழக அரசு பொய்யாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக கூறி இருப்பதாகவும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் தலைமையில் தான் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேற்றுவார் என, கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *