July 31, 2021

பொன்னேரி தொகுதியில், மக்கள் நீதி மையம் வேட்பாளர், தேசிங்குராஜன் தீவிர பிரச்சாரம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில், மீஞ்சூர் தேசிங்குராஜன் போட்டியிடுகிறார். இவர், மீஞ்சூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து அப்பகுதி மக்களுடன் நன்கு நெருங்கி பழகியவர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் தொடர்ந்து மூன்று முறை பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். சுயேட்சையாக கூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர் தற்போது பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், ஆரணி, உட்பட்ட நகர் பகுதிகளிலும் தொகுதியில் அடங்கிய அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் பிரச்சாரத்தின் போது, தங்கள் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் அவர்கள் பல புரட்சிகரமான திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாகவும், அதில் ஒரு சிலவைகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இதை போன்று பல மடங்கு திட்டங்களை அவர் திட்டமிட்டு வைத்திருக்கிறார்.

அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உண்மையில், மிக சிறந்த முன்னேறிய மாநிலமாக மாறும், எங்கள் கட்சிக்கு பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க என்னிடமே நேரடியாக உறுதி அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed