May 14, 2021

தமிழகத்தில் கொரோனா தொற்றை விரட்ட மீண்டும் தமிழகத்தில் 10ம் தேதியில் இருந்து கட்டுபாடுகள் தீவிரம்…

1 min read

தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு,

  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!
  • பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு
  • தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
  • திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
  • தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
  • தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி…!
  • வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
  • மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *