May 14, 2021

செங்கம் அருகே நெற் பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோணங்குட்டை கேட் மற்றும் புதுக்குளம் சொர்ப்பனந்தல் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது விவசாய கிணற்றில் உள்ள நீரை கொண்டு நெல் பயிர் நடவு செய்து இருந்தனர். கடந்த சில வாரமாகவே செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பயிரிட்ட நெற் பயிர்கள் காய்ந்து விடும் நிலையை அடைந்ததால் விலைக்கு நீர் வாங்கி நெல் பயிரை காப்பாற்றி வந்தனர்.

தற்போது நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெப்பச்சலனம் காரணமாக பெய்த காற்று மழையால் நெல் பயிர்கள் அனைத்தும் சாய்ந்து மகசூல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் பெருத்த வேதனை அடைந்துள்ளனர். வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்த நிலையில் திடீரென பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததால் முதலீடு செய்த பணம் கூட கிடைக்காது என்பதால் பெருத்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியார் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *