May 14, 2021

திருவண்ணாமலையில், வாக்களிக்க வந்த மக்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாததால், சாலை மறியலில் ஈடுபட்டனர்…

1 min read

தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்ற நிலையில், திருவண்ணாமலையில் பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வாக்களிக்க வெளியூரில் வேலை செய்யும் திருவண்ணாமலை சேர்ந்த மக்கள் வாக்களிக்க வந்திருந்தனர்.

அவர்கள் வாக்களித்து விட்டு திரும்பி செல்ல பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்து அவதிக்குள்ளாகினர். பின்னர், நள்ளிரவு வரை காத்திருந்த பயணிகள் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் பயணிகள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *