May 13, 2021

புழல் பகுதியில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை…

1 min read

சென்னை ரெட்டேரி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சாலையில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, புழல் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்த போது, இறந்தவரின் சட்டை பையில் இருந்த செல்போனில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு போலிசர் பேசினர். அதில், இறந்தவரின் மாமனார் கொடுத்த தகவலில் அவர் லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவை சேர்ந்த அன்பழகன்( 52) என்பதும், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, அன்பழகன் இறந்து இடந்த இடத்திற்கு அருகில் இருந்த செல்போன் கடையின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்ததில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அன்பழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அதில் ஒருவர் கை மற்றும் காலால் எட்டி உதைத்தும் பலவந்தமாக தாக்குவதும்,

அதில், தலை, நெற்றி பகுதி, முகம், மூக்கு வாய்ப்பகுதியில் பலத்த காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தவுடன் இருவரும் தப்பி ஓடியதும் பதிவாகி இருந்தது. இதனை ஆதாரமாக வைத்து தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், புழல் லட்சுமிபுரம் அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

கிருஷ்ணமூர்த்தியும் அவரது நண்பரும் ரெட்டை ஏரி செங்குன்றம் சாலையில் உள்ள லட்சுமிபுரம் டாஸ்மார்க் கடையில் மது பாரில் மது அருந்தும் போது அங்கு ஏற்கனவே இருந்த அன்பழகனிடம் குடிபோதையில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் மது பாரிலிருந்து வெளிவந்த போது அவரை பின் தொடர்ந்து வந்து வெங்கடேஸ்வரா தெருவில் நடந்து சென்ற அவரை தாக்கி விட்டு ஓடியதாகவும் தெரியவந்தது . இது குறித்து அன்பழகனின் மனைவி ரேகா, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இது சம்பந்தமாக புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *