May 12, 2021

பொன்னேரி அருகே, சாலையின் குறுக்கே ஆடு ஒடியதால், மினி லாரி நிலைதடுமாறி கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் படுகாயம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் இருந்து ஐஸ் கட்டிகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று, காஞ்சிபுரம் நோக்கி சென்ற போது, பொன்னேரி அடுத்த காவல்பட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஆடு ஒன்று ஓடி வந்தது. அதை கண்ட ஓட்டுநர், ஆட்டின் மீது வண்டி மோதி விடாமல் இருப்பதற்காக, திடீரென வாகனத்தை திருப்ப முயன்று உள்ளார்.

அப்போது அந்த மினி லாரி நிலைத்தடுமாறி, சாலையின் பக்கவாட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில், பழவேற்காடு பகுதியை சேர்ந்த அக்ரம் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் அக்பர் மற்றும் ஓட்டுநர் லோகநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த அக்ரமின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *