May 14, 2021

இராஜபதியில், 15 கிராம விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு, 4.5 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணம்!நாலுமாவடி சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!!

1 min read

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரைச் சுற்றியுள்ள கோட்டூர், குருகாட்டூர், மணத்தி, இராஜபதி, காராவிளை, மயிலோடை, குரும்பூர், சுகந்தலை, வெள்ளக்கோவில், மைக்கன்நாடார்குடியி ருப்பு, வரண்டியவேல், அகோபாலபுரம், நாகக்கன்னியாபுரம், ஆறுமுகனேரி, சோழியக்குறிச்சி உள்ளிட்ட 15 கிராம விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை 220 விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணமாக, “விவசாயத்தை காப்போம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், புது வாழ்வுச் சங்கமும் இணைந்து வழங்கினர்.

நிகழ்ச்சியை, மணத்தி எட்வின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கடம்பாகுளம் முன்னாள் விவசாய சங்கத் தலைவர் இராஜபதி டி.டி.குணா வரவேற்றார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், வெள்ளக்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், கல்லாம் பாறை பெருமாள் ஆகியோர் பேசினர். விழாவில், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்; ஒரு நாட்டின் இரண்டு கண்கள் விவசாயிகளும், இராணுவ வீரர்களும்தான். எங்கே விவசாயிகள் மறக்கப்படுகிறார்களோ அங்கே ஆசீர்வாதம் இல்லாமல் போய்விடும். தேசம் ஆசீர்வாதத்தை இழந்து விடும். ஒரு தேசத்தின் ஆசீர்வாதமே விவசாயிகளைக் கொண்டுதான் இருக்கி றது. வானத்தையும், பூமியையும் உண்டாக்கின இறைவன் மனிதனுக்கு முதலாவது கொடுத்த வேலை விவசாய வேலைதான்.

ஆதாம், ஏவாளை படைத்து ஒரு தோட்டத்தை உருவாக்கி இதனை பண்படுத்தி பாதுகாத்துக்கொள் என்று சொல்லி முதலாவது கொடுத்த வேலை விவசாய வேலை. நானும் ஒரு விவசாயி. எனக்கு பூர்வீக சொத்தில் கிடைத்ததை வைத்து விவசாயம் செய்து வருகிறேன். இதன் கஷ்ட,நஷ்டம் எனக்கு தெரியும். அதனால் தான் விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு இறைவன் தந்தார். விவசாயிகள் விவசாயம் செய்வது தேசத்தின் ஆசீர்வாதத்திற்காக. முதலாவதாக கடம்பாகுளத்தை தூர்வாரினால் இப்பகுதியிலுள்ள வயல்நிலங்கள் செழிப்பாகி நல்ல அறுவடை கிடைக்கும் என்பதினால் விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்து குளத்தை தூர் வார வேண்டும் என்று ஆலோசனை நடத்தினோம். ஆனால், அரசு அனுமதி பெற வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகளை அணுகி அதற்கான அனுமதியை பெற்று குளம் தூர்வார ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது குளத்திற்கு தண்ணீர் வந்தது. குளம் தூர்வார முயற்சி எடுத்த நாள்முதல் இதுவரை தண்ணீர் வற்றவில்லை. குளத்தில் தண்ணீர் வற்றியவுடன் கண்டிப்பாக கடம்பாகுளம் தூர் வாரப்படும்.

விவசாய சங்கங்கள், விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து அரசு ஒழுங்கின்படி, கடம்பாகுளம் தூர் வார ஆவண செய்யப்படும்.
2-வது தாமிரபரணி ஆற்றை ஆழ்வார் திருநகரி பாலம் முதல் முக்காணி வரையுள்ள கரையோ ரங்களில் உள்ள சீமை மரங்களை அகற்றி அதில் கனி தரும் விருட் சங்கள் மா, புளி நடப்படும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் உண்டாகும். தேர்தல் முடிவுகள் வெளி வந்ததும் இந்த பணிகள் துவங்கப் படும். மேலும், ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் 75-வது சுதந்திர தினத்தன்று சீமைக்கருவேல மரங்கள் அடியோடு பிடுங்கப்பட்டு அதில், கிராம ஊராட்சிகளுக்கு வருமானம் ஈட்டக் கூடிய கனி தரும் மரங்கள் 75 ஆயிரம் நடும்பணி துவக்கி வைக்கப்படும்.

நன்மை செய்ய வேண்டும் என வேதத்தில் குறிப்பிடப்பட்டது போல, இப்பகுதி மக்களுக்கு நன்மை செய்ய எண்ணி இது போன்ற செயல்களை செய்து வருகிறோம். இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில் இராஜபதி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்திரராஜன், சேதுவாய்க்கால் ஊராட்சி மன்றத்தலைவர் சுதாசீனிவாசன், குருகாட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்மணி உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்ட னர். இதற்கான ஏற்பாடுகளை டி.டி.குணா தலைமையில், நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொது மேலாளர் செல் வக்குமார், ஹெயின், கோயில், ஜேம்ஸ் மற்றும் ஒருங்கிணைப் பாளர் மணத்தி எட்வின் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் –
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *