May 13, 2021

திருவள்ளுர் மாவட்டத்தில்,
கொரோனா இலவச தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை மையத்தை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்து பார்வையிட்டார்…

1 min read

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா பரவல்
தினந்தோறும் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இன்று திருவள்ளுர் அடுத்த காக்களூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் காய்ச்சல் முகாம் மற்றும் கொரோனா பரிசோதனையையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுபத்ராராஜ்குமார் சுகாதார அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – A. மகேஸ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *