May 13, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், 13 மற்றும் 14 ம் தேதி கோவில்களில், சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள, மாவட்ட நிர்வாகம் தடை …

1 min read

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாளை 13ம் தேதி தெலுங்கு புத்தாண்டு, மற்றும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

இதனால் முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக வருவார்கள் என்பதால், இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்னேரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுவாபுரி முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் 13 மற்றும் 14 ம் தேதி நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கமான வழிபாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகம் நடத்திக்கொள்ளலாம் என்றும் எக்காரணம் கொண்டும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் உட்பட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *