May 13, 2021

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பனை ஓலை மூலம் கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஜமிலாபாத் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள் வாழ்வில் மேம்பாடு அடைவதற்கு வழிமுறையாக பனை ஓலை மூலம் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஒரு மாத காலம் பயிற்சிகள் நிறைவடைந்த பின் அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு நிறுவனர் ஹாஜாமைதீன் ஏற்பாட்டில் பழவேற்காடு அடுத்த ஜமிலாபாத்தில் நடைபெற்றது.

காட்டுப்பள்ளி அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இந்த பயிற்சியினை, 50 பெண்கள் பெற்று வந்தனர். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த பயிற்சியில் பனை ஓலை மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்களான பைகள், கிலுகிலுப்பை, அழகு அழகு சாதன பொருட்கள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்படும் மகளிருக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அதானி அறக்கட்டளை சமூக பொறுப்பு தென்னிந்திய தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திட்ட அலுவலர்கள் மெய்யப்பன் தயாநிதி உள்ளிட்ட களப் பணியாளர்கள் மற்றும் சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு நிறுவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *