May 13, 2021

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக, 7,000 பேருக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக 7,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி, பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் காட்டூர், தேவம்பட்டு, அத்திப்பட்டு உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமாக இந்த மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசியினை போட்டுக் கொள்கின்றனர். இதுகுறித்து, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் கூறும்போது, இதுவரை 7,000 பேருக்கு கொரோனா தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *