May 12, 2021

திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மீது சூர்ய ஒளி படர்ந்த அறிய நிகழ்வு…

1 min read

திருநேர் அண்ணாமலையை வழிபட்ட சூரிய பகவான், கிரிவலப்பாதையில் நிகழ்வு. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திரு நேர் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வாமை ஆண்டும் சித்திரை மாதம் முதல் தேதி மட்டும், சூரிய உதயத்தின் போது திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி படரும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது.

அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின் போது திரு நேர் அண்ணாமலையார் சிலை மீது சூரிய பகவான் படர்ந்து வழிபட்டார். இந்த அறிய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வணங்கினர்.

தமிழ் புத்தாண்டு பிலவ ஆண்டு 14.4.2021 புதன்கிழமை அருள்மிகு உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் சம்பந்த விநாயகருக்கு புதிய பிலவ வருட பஞ்சாங்கம் படைக்கப்பட்டு, சிவாச்சாரியார்களால் படிக்கப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *