May 13, 2021

திருவண்ணாமலை அறிவியல் பூங்கா திடீர் மூடப்பட்டது…

1 min read

விடுமுறை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
திருவண்ணாமலை ஏப் 15
உலக மக்களை கடந்த ஓராண்டாக கண்ணுக்குத் தெரியாத கொரோனா எனும் வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா மக்கள் வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டது. உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் மக்கள் நாட்களை நகர்த்தி வருகின்றனர். தமிழகத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இரண்டாவது கட்டமாக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனாவுக்கு 288 பேர் உயிரிழந்தனர். கடந்த மாதம் முதல் இரண்டாவது கட்ட கொரோனா திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது .
அங்கு நேற்று திடீரென தற்காலிக விடுமுறைக்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன .

அதில், கொரோனா பெரும்தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுப்பட்டுஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தங்கள் பொழுதை இனிமையாக கழிக்க வந்த சிறுவர் -சிறுமியர் மற்றும் பெரியவர்கள் ஏமாற்றமடைந்தனர். அங்கு வரும் பொது மக்களை நம்பி சாலையோரங்களில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா தொடர்ந்து அதிகமாக பரவி வருவதால் பூங்கா திறக்க
இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. காலை ,மாலை நேரங்களில் பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவர் -சிறுமியர்கள் இனிமேல் பூங்கா திறக்கப்படுவது கேள்விக்குறிதான் என்று வேதனை அடைந்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *