May 12, 2021

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட, மஞ்சக்குப்பம் மருத்துவமனைக்கு, மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை…

1 min read

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட,
மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு, ஒரு அவசரம் என்று கர்பிணி பெண் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றார். அப்போது, “மருத்தவர்கள் யாரும் இல்லை” என்று, அங்கு பணிபுரியும் வெள்ளை புடவை கட்டிய செவிலியர் ஒருவர் கூறுகிறாராம், இந்த நிலை அன்று ஒரு நாள் மட்டும் அல்ல, பெரும்பாலும், எந்த நேரம் சென்றாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் எந்நேரமும் வருவார்கள். ஆனால், மருந்துவர்கள் இல்லாததால், பணியில் உள்ள ஒரு சில செவிலியர்கள் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சரிவர பதில் சொல்லாமல், ஒருமையில் பேசி முகத்தில் அறைந்தார் போல் பதிலளிக்கின்றனர்.


உயர் அதிகாரிகள், “இந்த மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் நியமிக்க வேண்டும்” என்பது, அங்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

செய்திகள் – கார்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *