May 14, 2021

செங்கம் அருகே, அல்லியந்தல் ஊராட்சியில், நடிகர் விவேக்கிற்க்கு, மரகன்றுகள் நட்டு அஞ்சலி…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அல்லியந்தல் கிராமத்தில் உள்ள அய்யா, அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மற்ற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சின்ன கலைவாணர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செய்தார்கள்.

நிகழ்வின் போது, Dr.A.P.J.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், சின்ன கலைவாணர் நினைவாக1159 இயற்கை வளம் தர கூடிய மர கன்றுகள் நடும் நிகழ்வை அல்லியந்தல் ஊராட்சி பொது மக்கள் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர் பொம்மிமுருகன் துவங்கி வைத்தார். நிகழ்வில், ஏராளமான இளைஞர்கள் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *