May 13, 2021

அறந்தாங்கி கலைஞர் மன்றத்தில், தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை தெ.மா.செயலாளர் ரகுபதி திறந்து வைத்தார்..

1 min read

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தணிக்க நீர் மோர் பந்தலானது அறந்தாங்கி வாகைமரம் கலைஞர் மன்றம் அருகே அமைக்கப்பட்டது. நகர செயலாளர் ஆனந்த் தலைமையில் தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், தி.மு.க மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திக்கேயன் , மாவட்ட அவைத்தலைவர் பொன் துரை, தலைமை பொதுக்குழு உறுப்பிணர்கள் ஆர்.ஆர்.கே. கலைமணி, கைராசி பருஷோத்தமன், ஒன்றிய கழக செயலாளர்கள் பொண்.கணேசன், மனமேல்குடி சக்தி.ராமசாமி, நகர அவைத்தலைவர் தியாகராஜன், நெசவாளர் அணி அன்பழகன், அனந்தராமன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் கைலாசம், தமிழ்மறைச்செல்வன், துளசிராமன், ஜ.டி.விங் நிர்வாகிகள் ஹரி விமலாதி , விக்ரம் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் டி.முத்து ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *