May 14, 2021

தமிழக சிறைத்துறையில், கூடுதல் சூப்பிரண்டு காலிப்பணியிடங்ளை நிரப்ப கோரிய வழக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க, ஐகோர்ட்டு மதுரை கிளை கால அவகாசம்…

1 min read

தமிழக சிறைத்துறையில் காலியாக உள்ள, கூடுதல் சூப்பிரண்டு மற்றும் சமூக நல அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மேலும் 4 வார காலம் அவகாசம் நீடிப்பு செய்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை, சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது;

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல், 24 கூடுதல் சூப்பிரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறைகளில் இப்பணி மிகவும் முக்கியமானது. சிறையில் கைதிகளை அனுமதிப்பது, விடுவிப்பது, வாரண்ட் தொடர்பான அனைத்து வித ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை இவர்களது பணியாகும். ஜெயிலராக பணியாற்றுவோர் பதவி உயர்வின் மூலம் கூடுதல் சூப்பிரண்டுவாக நியமிக்கப்படுவார்கள்.
இதேபோல சிறைகளிலும், கூர்நோக்கு இல்லங்களிலும் சமூக நல அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளன. இதனால், மற்ற பணிகளில் உள்ளவர்கள் கூடுதலாக இந்த பணிகளை செய்ய வேண்டியுள்ளதால், வழக்கமான பணிகள் பாதிக்க படுகின்றன.

மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 5 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்களை போன்றவர்களுக்கு உளவியல் ரீதியாக மனோதத்துவ பயிற்சி அளிக்க முடியவில்லை. இதனால், தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சிறை துறைகளில் காலியாக உள்ள கூடுதல் சூப்பிரண்டு மற்றும் சமூக நல அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். என, மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கு குறித்து, உள்துறை – கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து, பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *