May 14, 2021

கர்ணன் படத்திற்கு 100பேரை அழைத்து சென்று காண செய்த, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர்

1 min read

தமிழ் திரையுலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகர், “தனுஷ்” இவர், ஆரம்ப காலத்திலிருந்து தான் நடிக்கும் புதிய திரைப்படங்களுடைய கதைகளை தேர்வு செய்வதில் கவனத்துடன் இருந்து தேர்வு செய்வதுடன் மேலும், அந்த கதைக்கு ஏற்றவாறு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு, நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அவருக்கென தனி இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நிலையில், சமீபத்தில் திரைக்கு வந்த கர்ணன் திரைப்படமும் தமிழக மக்களிடையே எந்த விருப்பு-வெறுப்பு வேறுபாடுமின்றி அனைவருடைய பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் சமீபத்தில் அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறார் அந்தத் திரைப்படத்தை பார்த்து ரசித்ததுடன் இல்லாமல் மகிழ்ச்சியில், அவர் வசிக்கும் கிராமத்தில் இருந்து 100பேரை அழைத்துக் கொண்டு கர்ணன் திரைப்படத்தை காண செய்தார்.

கர்ணன் திரைப்படம் கும்மிடிப்பூண்டியில் கணபதி திரையரகில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த கே.எம்.எஸ்.சிவகுமார் அவரது கிராமமான ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த 100 பேரை அழைத்து கொண்டு மேற்கண்ட திரையரங்கிற்கு சென்றார். தொடர்ந்து அனைவரும் திரைப்படம் பார்த்த நிலையில், படம் முடிந்ததும் அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார்.

கர்ணன் திரைப்படம் அனைவரின் பாராட்டை பெற்று வரும் நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் கர்ணன் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால், 100 பேரை தன் சொந்த செலவில் அந்த படத்தை காண அழைத்து சென்ற சம்பவம் கும்மிடிப்பூண்டியில் மக்களிடம், ஆச்சரியத்தை அளித்தது.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *