May 13, 2021

பேரண்டூரில், அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடி, நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பேரண்டூர் கிராமத்தில், ஏழை எளிய மக்களை தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை நிறுவன தலைவரும் முன்னாள் வட்டாட்சியருமான டாக்டர் இளவரசி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பேரண்டூர் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பேரண்டூர் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு பெரியபாளையம் அடுத்துள்ள
கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளையின் நிறுவனர் தலைவரும் முன்னாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் டாக்டர் இளவரசி டாக்டர் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தார்.

பின், அம்பேத்கர் திருவுருவ படத்திற்க்கு, மாலை அணிவித்து மலர்தூவி, இனிப்பு வழங்கியும், பின்னர் 64 பெண்களுக்கு சேலைகள் 60 ஆண்களுக்கு வேட்டிகள் 45 ஏழை பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு, புத்தகம், உள்ளிட்ட நல திட்ட உதவிகளையும் வழங்கி, டாக்டர் அம்பேத்கர் அவரைக் குறித்து பேசினார்.

இதில், அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், ஆகியோர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *