May 13, 2021

சோழவரம் அருகே, உறவினர்களே பிரசவம் பார்த்ததால் வடமாநில தாய், சேய் உயிரிழப்பு, போலீசார் விசாரணை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு ஒடிசாவை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் கோபு என்பவரது மனைவி பூஜா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லாமல் செங்கல் சூளையிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்ததில் பூஜா உயிரிழந்துள்ளார்.

மேலும், பெண் சிசுவும் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் இருவரது சடலங்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முற்பட்ட போது தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் சுயமாக பிரசவம் பார்த்தில் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *