May 14, 2021

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் தன்னம்பிக்கையோடு உழைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே டாக்டர் அம்பேத்கர் நகர் என்னும் கிராமத்தில் வசிப்பவர் தன்ராஜ் இவரது மகன் வீரமணி மாற்று திறனாளரான இவர் சிறு வயது முதல் தனது நிலையை கண்டு துவண்டுவிடாமல் ஏதாவது சிறு தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பணிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அளித்த சிறு நிதி உதவியோடு சொந்தமாக சைக்கிள் பழுது பார்க்கும் பணிகள், வீட்டு உபயோக பொருட்கள் பட்டை திட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கான கடை ஒன்றினை ஆரம்பித்துள்ளார். இதனை அதானி அறக்கட்டளை சமூக பொறுப்பு தென்னிந்திய தலைவர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து வாழ்த்தினார்.

திட்ட அலுவலர்கள் மெய்யப்பன், தயாநிதி உள்ளிட்ட களப் பணியாளர்கள் உடனிருந்தனர். என்னால் முடியாது என எத்தனையோ பேர் வாழ்கையில் சோர்ந்து விடும் இச்சூழலில்
மாற்றுதிறனாளர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம் தான்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *