May 14, 2021

பழவேற்காடு அரசு மருத்துவமனையில், 900 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 3700 பேருக்கு கொரோனா பரிசோதனை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுலா பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மீன் விற்பனை, மீன் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு என்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு மக்கள் கூடுவதை தவிர்க்க முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த ஒட்டுமொத்த மக்களின் ஒரே மருத்துவ ஆதாரமாக இருப்பது பழவேற்காடு அரசு மருத்துவமனை ஆகும். பழவேற்காடு அரசு மருத்துவமனையில் தினமும் காய்ச்சல் கிளினிக்கில் சுமார் 450 க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற நோயாளிகளாகவும், 20 முதல் 25 பேர் உள் நோயாளிகளாகவும் பயன் பெற்று வருகின்றனர். அனைத்து வசதிகள் கொண்ட லேப் உள்ளதால், 150 முதல் 175 சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. சிறந்த செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்கள் மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது.

மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 900 பேருக்கு கோவிஷீல்ட் வேக்ஸின் போடப்பட்டுள்ளது. 3700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து 250 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இது குறித்து முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் கூறும்போது திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனைத்து வித நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து வசதியில்லாத கிராம பகுதிகளுக்கும் மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துடன் ஒருங்கிணைந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *