May 14, 2021

ரெட்டேரி அருகே, உடலில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொண்டு, சாலையில் ஓடிய நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…

1 min read

சென்னை ரெட்டேரி அடுத்த விநாயகபுரம் பகுதியில், திடீரென சாலையில் ஒருவர் உடல் முழுவதும் மள, மளவென தீ எரிந்த நிலையில் அலறியடித்து ஓடி வருவதை கண்ட, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது, தீ அணைக்கப்பட்டு, உடல் கருகிய நிலையில் சிறிது நேரம் நின்றிருந்த அந்த நபர், பின் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக, அங்கு இருந்தவர்கள் புழல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீக்காயமடைந்த அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், 80 சதவீதம் தீக்காயங்களோடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல் துறையினரின் விசாரணையில், இறந்தவர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும், பழைய வீடுகளை இடிக்கும் தொழில் செய்து வருவதாகவும், இவரது மகன் உடல் நலமின்றி உயிரிழந்த நிலையில், சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதனால், தமது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *