May 13, 2021

மறைந்த நடிகர் விவேக் நினைவாகவும், உலக பூமி தினத்தையொட்டியும்,திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில், 59 மரக்கன்றுகள் நடபட்டது…

1 min read

இன்று, உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. அதையும், திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணி செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அப்பணிையை தொடரும் வகையிலும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கம்முனிட்ரி அமைப்பின் நிறுவனர் அப்பிஸ்சுல்லா அவர்களும் இந் நிகழ்சியில் பங்கேற்றார். ஆயுதப்படை காவலர்கள் மூலம், 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

உலக புவி தினத்தை ஒட்டியும், மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் அவரது வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றும், மாவட்ட எஸ்பி அரவிந்தன் அவர்கள் தெரிவித்தார்.

உலக பூமி தினம் ஆண்டு தோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம் இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும், அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும், 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன, “திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் மறைந்து விட்டார் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், தமக்கு அதில் உடன்பாடில்லை அவரது கலை சேவையிலும், இது போன்ற இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் அதே புகழுடன், நம்மோடு இருப்பார் என்று நம்புகிறேன்” என, பிக்பாஸ் ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *