May 14, 2021

செங்குன்றத்தில், கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

1 min read

செங்குன்றம் பஜாரில் இருந்து, திருவள்ளூர் கூட்டு சாலை வழியாக சோத்துப்பாக்கம் சந்திப்பு வரை SWOTT சமூக பணிக்குழு அறக்கட்டளை நண்பர்கள் மற்றும் போக்குவரத்துகாவல்துறையினருடன், ஒன்றிணைந்து ஆல்ஃபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இயக்குநர் ஜெரால்டு ஃபின்னி, குட்வேர்ட் பப்ளிக் பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அருண், செயின்ட்.மேரிஸ் பள்ளி மற்றும் தன்னார்வலர்கள், TIPVODA அணி ஜூட் மேத்யூ ஆகியோர் கைகளில் பதாகைகளுடன் பேரணியாக…. பொதுமக்களிடம், முகக் கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

சமூக பணிக் குழு அறக்கட்டளை நிறுவனர் சமீர், தலைவர் ஜி.பாலாஜி, செயலாளர் ஜி.பாரிசெல்வம், பொருளாளர் தமீமுன் அன்சாரி உள்ளிட்ட SWOTT குழுவினர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை போக்குவரத்து காவல் வடக்கு மாவட்ட துணை ஆணையாளர் முனைவர் எம்.துரை, கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாதவரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆர்.மலைச்சாமி, மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.ராஜ்குமார், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், செங்குன்றம் பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் மதியழகன், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கி… விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் பங்கேற்றனர்.

இதில் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எஸ்கே. வரதராஜன், செயலாளர் நண்பன் எம்.அபுபக்கர், பொருளாளர் கே.குமரேசன், எலைட் பள்ளிக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜி.பால் செபாஸ்டின், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில பொதுச் செயலாளர் இ.மாரியப்பன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் ஜி.பாலாஜி, செயலாளர் கா.ஷண்முகசுந்தரம், பொருளாளர் கோபிநாத், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி மு.பீலிக்கான் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியளார் – ரெட்ஹில்ஸ் நண்பன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *