May 13, 2021

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில், புளியமரம் வளர்க்க விழிப்புணர்வு கொடுக்கும் பத்திரிக்கையாளர்…

1 min read

தமிழர்களுடைய உணவு பழக்க வழக்கத்தில் அதிகம் பயன்படுத்த கூடிய மிக முக்கிய பொருளாக இருப்பது புளி. அது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள கூடிய முக்கிய ஒரு பொருளாகவும் நம்முடைய உடலுக்கு பலவிதங்களில் நன்மை பயக்கக்கூடிய ஒரு உணவு பொருளாக இருந்து வருகிறது. அதனுடைய தேவை அதிகம் இருக்கக்கூடிய சூழலில், தற்போது தமிழகமெங்கும் சாலை விரிவாக்கம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற காரணங்களால், புளியமரம் அதிக அளவில் அழிவை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பத்திரிக்கையாளர் கஜேந்திரன் என்பவர் புளிய மரங்களை வளர்க்க வேண்டி, “விதை விதைப்போம் வா” என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதில், ஒரு முக்கிய பணியாக மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும், மக்களையும் சந்தித்து, ஒவ்வொரு ஊரிலும் புளியங்கொட்டையை விதையாக, தன்னுடைய சொந்த செலவில் வாங்கி, காயவைத்து, பக்குவபடுத்தி, கொடுத்து விதைக்க செய்கிறார்.

சாலை ஓரங்கள் மட்டுமில்லாமல் பொதுஇடங்களிலும், ஒவ்வொருவருடைய வீட்டிலும் புளியம் விதையை விதைக்க செய்கிறார். மேலும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களைத் நேரடியாக சந்தித்து புளியமரத்தினுடைய தேவை பற்றியும், அதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றியும், எடுத்துரைத்து, ஒவ்வொருவரிடமும் புளியமர விதைகளை வழங்கி, விதைக்க செய்கிறார்.

அதன்படி, மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் விதைக் கும் பணியை இன்று துவக்கப்பட்டது. முன்னதாக, அனுப்பம்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து புளிய மரம் வளர்க்க வேண்டி கேட்டு கொண்டதுடன், அவர்களிடம், “நான் இந்த புளியமரத்தை உங்களிடம் அறிமுகப்படுத்தி பேசவில்லை, புளியமரத்தின் பலனை நாம் அனுபவித்து வந்து கொண்டிருக்கிறோம். புளியமரம் சொந்தமாக நம்மிடம் ஒன்று இருந்தால் போதும். புளியை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வருவாயும் நமக்கு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உங்களுக்கு புளிய மரத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் பணியை தான் இப்போது நான் செய்கிறேன். ” என கூறி விழிப்புணர்வு வழங்கினார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *